நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ருவான் டி ஸ்வார்ட் 55 ரன்களுடனூம், ஷான் வான் பெர்க் 34 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வான் பெர்க் 38 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்வார்ட்டும் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த டாம் லேதம் - கேன் வில்லியம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாம் லேதம் 40 ரன்களுக்கும், கேன் வில்லியம்சன் 43 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 29 ரன்களுக்கும், வில் யங் 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் நெய்ல் வாக்னர் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இதனால் நியூசிலாந்து அணி 77.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தனே டேன் பீட் 5 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 31 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News