New Zealand Women vs Australia Women 2nd T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்க்கெனவே ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து மகளிர் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

NZ-W vs AUS-W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
  • இடம் -  பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய்
  • நேரம் - மார்ச் 23, காலை 7.15 மணி (இந்திய நேரப்படி)

NZ-W vs AUS-W, Pitch Report

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி மவுண்ட் மவுஙானுய் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 19 டி20 போட்டிகளில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 155 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 136 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

NZ-W vs AUS-W: Where to Watch?

Advertisement

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காண முடியும். இது தவிர, அமேசான் பிரைம், சோனி லிவ் மற்றும் ஃபேன் கோட் செயலிகளிலும் இந்த போட்டியை ரசிகர்கள் காண முடியும்.

NZ-W vs AUS-W Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 20
  • நியூசிலாந்து - 06
  • ஆஸ்திரேலியா - 14

NZ-W vs AUS-W T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பெத் மூனி 
  • பேட்ஸ்மேன்கள் - சூஸி பேட்ஸ், எல்லிஸ் பெர்ரி
  • ஆல்-ரவுண்டர்கள் - தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், சோஃபி டிவைன், அமெலியா கெர்
  • பந்து வீச்சாளர்கள் – கிம் கார்த், அலானா கிங், ஈடன் கார்சன், ஜெர் கெர்
Advertisement

New Zealand Women vs Australia Women Probable Playing XI

New Zealand Women Probable Playing XI: சூசி பேட்ஸ் (c), ஜார்ஜியா பிளிம்மர், சோஃபி டிவைன், ப்ரூக் ஹாலிடே, அமெலியா கெர், மேடி கிரீன், ஜெஸ் கெர், பாலி இங்கிலிஸ், ரோஸ்மேரி மெய்ர், ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ்

Australia Women Probable Playing XI: பெத் மூனி, எலிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரேஸ் ஹாரிஸ், தஹ்லியா மெக்ராத் (கேப்டன்), அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், மேகன் ஸ்கட், டார்சி பிரவுன்

Advertisement

NZ-W vs AUS-W Dream11 Prediction, NZ-W vs AUS-W Dream11 Team, Fantasy Cricket Tips, NZ-W vs AUS-W T20I Series, NZ-W vs AUS-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, New Zealand Women vs Australia Women

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News