WI vs AUS, 1st Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று(ஜூன் 25) பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையிலும் ஷமார் ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

அவர்களைத் தொடர்ந்து இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற ஜோஷ் இங்கிலிஸும் 5 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் கவாஜாவுடன் இணைந்த டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் கவாஜா 47 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஆகியோரும் சோபிக்க தவறினர். மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் கடந்திருந்த டிராவிஸ் ஹெட் 78 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிரேய்க் பிராத்வைட் 4 ரன்னிலும், ஜான் காம்பெல் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் பிராண்டன் கிங் ஒருபக்கம் ரன்களை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட, மறுபக்கம் கேசி கார்டி 20 ரன்களுக்கும், ஜொமல் வாரிக்கன் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிராண்டன் கிங் 23 ரன்களுடனும், ரோஸ்டன் சேஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News