இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இத்தொடரின் முதல் பகுதியானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

Advertisement

மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. இதில் தமிழ்நாடு அணியை ஷாருக் கானும், கேரள அணியை சஞ்சு சாம்சனும், மும்பை அணியை ஸ்ரேயாஸ் ஐயரும் வழிநடத்தவுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பெங்கால் அணியை அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

Advertisement

இதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெங்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில், மத்திய பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய முகமது ஷமி தொழில்முறை கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பினார். முன்னதாக கடந்தாண்டு நடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த அவர், அதன்பின் ஓராண்டுகாலமாக எந்தவித போட்டிகளிலும் இடம்பிடிக்காமல் இருந்தார். 

மேற்கொண்டு தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி, ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் இருந்து விலகினார். இந்நிலையில் தான் காயத்தில் இருந்து மீண்ட அவர், நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிரார். அந்தவகையில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஷமி, இரண்டு இன்னிங்ஸிலும் 43.2 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கொண்டு பேட்டிங்கிலும் 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார், இதன் காரணமாக பெங்கால் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை விழ்த்தி வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 22 முதல் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஷமி ஆஸ்திரேலியா செல்லக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் முகமது ஷமியின் உடற்தகுதிய பரிசோதித்த பிறகே அவரை இந்திய அணியில் இணைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அவர் தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கான பெங்கால் அணியில் ஷமியின் சகோதரர் முகமது கைஃப்பும் இடம்பெற்றுள்ளார். இதுதவிர ஐபிஎல் நட்சத்திரம் அபிஷேக் போல், ஷாபாஸ் அகமது ஆகியோரும் அணியில் உள்ளனர்.

Advertisement

பெங்கால் அணி: சுதீப் குமார் கராமி (கேப்டன்), அபிஷேக் போரல், சுதீப் சட்டர்ஜி, ஷாபாஸ் அகமது, கரண் லால், ரித்திக் சட்டர்ஜி, ரித்விக் ராய் சவுத்ரி, ஷகிர் ஹபீப் காந்தி, ரஞ்சோத் சிங் கைரா, பிரயாஸ் ரே பர்மன், அக்னிவ் பான், பிரதீப்தா பிரமானிக், சக்சம் சவுத்ரி, முகமது ஷமி, இஷான் போரல், முகமது கைஃப், சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், சயன் கோஷ், கனிஷ்க் சேத் மற்றும் சௌம்யதீப் மண்டல்..

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News