நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர வலை பயிற்சியில் ரோஹித் சர்மா - வைரல் காணொளி!

Updated: Mon, Oct 14 2024 13:04 IST
Image Source: Google

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது.

இதனைத்தொடர்ந்து இந்திய அணி இம்மாதம் நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவிளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்த இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யாஷ் தயாளிற்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதுதவிர வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடிய மற்ற அனைத்து வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். இதில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன், துரூவ் ஜூரெல், சர்ஃப்ராஸ் கான், ஆகாஷ் தீப் ஆகியோரும் இத்தொடருக்கான இந்திய அணி தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். இதனால் நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டிக்காக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தீவிரமான வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ரோஹித் சர்மா வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை