Pakistan vs England 1st Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி நாளை முல்தானில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் பாகிஸ்தான் அணியானது ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியோ இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தாலும், கடைசி போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு தங்கள் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PAK vs ENG 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
  • இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
  • நேரம் - காலை 10.30 மணி (இந்திய நேரப்படி)

PAK vs ENG 1st Test Pitch Report

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 6 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 3இல் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 2 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 333 ரன்களாவும், மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 675 ரன்களும் உள்ளன. மேலும் முல்தான் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

PAK vs ENG 1st Test: Where to Watch?

Advertisement

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்யவில்லை. 

PAK vs ENG Test Head To Head Record

  • மொத்தம் - 88
  • பாகிஸ்தான் - 21
  • இங்கிலாந்து - 28
  • முடிவில்லை - 39

Pakistan vs England 1st Test Probable Playing XI

Advertisement

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல், சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீர் ஜமால், ஷஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கே), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜேக் லீச், ஷோயப் பஷீர். 

PAK vs ENG 1st Test Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), ஜேமி ஸ்மித்
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் அசம், பென் டக்கெட், ஜாக் க்ராலி, ஹாரி புரூக்
  • ஆல்ரவுண்டர் - ஜோ ரூட் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஜாக் லீச், அப்ரார் அகமது, கஸ் அட்கின்சன், ஷஹீன் அஃப்ரிடி.
Advertisement

PAK vs ENG 1st Test Dream11 Prediction,PAK vs ENG Dream11 Prediction, Today Match PAK vs ENG, PAK vs ENG Test Series, PAK vs ENG Dream11 Team, Fantasy  Cricket Tips, PAK vs ENG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England Tour of Pakistan, Injury Update of the match between Pakistan vs England

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News