பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்கும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு அதிகளவு பவுன்ஸ் இருப்பதால் பேட்டர்களால் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் பந்தை ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 41
  •     பாகிஸ்தான் - 22
  •     நியூசிலாந்து - 17
  •     முடிவில்லை - 02

நேரலை

Advertisement

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), சைம் அயூப், முகமது ரிஸ்வான், உஸ்மான் கான், இஃப்திகார் அகமது, இர்ஃபான் கான், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது ஆமிர், அப்ரார் அகமது.

Advertisement

நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிம் செஃபெர்ட், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல் (கே), ஜோஷ் கிளார்க்சன், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, பென் சியர்ஸ், பெஞ்சமின் லிஸ்டர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்கள்: டிம் சீஃபர்ட் (கேப்டன்), முகமது ரிஸ்வான்
  •     பேட்டர்ஸ்: பாபர் ஆசாம், மார்க் சாப்மேன், சைம் அயூப் (துணை கேப்டன்)
  •     ஆல்-ரவுண்டர்கள்: ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், ஜோ கிளார்க்சன்
  •     பந்துவீச்சாளர்கள்: ஷாஹீன் அஃப்ரிடி(துணைக்கேப்டன்), நசீம் ஷா, முகமது அமீர்

PAK vs NZ T20I Dream11 Prediction, Today Match PAK vs NZ 3rd T20I, PAK vs NZ Fantasy Cricket Tips, PAK vs NZ Dream11 Team, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Pakistan vs New Zealand

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News