பாகிஸ்தான் vs நியூசிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Apr 24 2024 16:33 IST
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
  • இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கடாஃபி கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. மேலும் இந்த மைதானத்தின் பேட்டிங் சராசரி 162 ரன்களாக உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டி அதிக ரன்கள் கொண்ட போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 42
  •     பாகிஸ்தான் - 22
  •     நியூசிலாந்து - 18
  •     முடிவில்லை - 02

நேரலை

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: பாபர் ஆசாம் (கே), சைம் அயூப், உஸ்மான் கான், ஃபகார் ஸமான், இஃப்திகார் அகமது, இர்பான் கான், ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர், அப்ரார் அகமது.

நியூசிலாந்து: டிம் செய்ஃபெர்ட், டிம் ராபின்சன், மார்க் சாப்மேன், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல் (கே), கோல் மெக்கன்சி, ஜேக்கரி ஃபௌல்க்ஸ், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, வில்லியம் ஒ ரூர்க்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்கள்: டிம் சீஃபர்ட்
  •     பேட்டர்ஸ்: பாபர் ஆசாம், மார்க் சாப்மேன்(கேப்டன்), சைம் அயூப் (துணை கேப்டன்), ஃபகர் ஸமான்
  •     ஆல்-ரவுண்டர்கள்: ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், ஷதாப் கான்
  •     பந்துவீச்சாளர்கள்: ஷாஹீன் அஃப்ரிடி, இஷ் சோதி முகமது அமீர்

PAK vs NZ T20I Dream11 Prediction, Today Match PAK vs NZ 4th T20I, PAK vs NZ Fantasy Cricket Tips, PAK vs NZ Dream11 Team, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Pakistan vs New Zealand

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை