ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான், இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னேறிய நிலையில், மீதமுள்ள இடத்தை பிடிக்கு அணி எது? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

Advertisement

அதன்பின் இன்று நடைபெற்ற முக்கியமான் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - அப்துல்ல ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸ்மான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 ரன்கள் எடுத்த நிலையில் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் அரைசதம் கடந்த அப்துலா ஷஃபிக் 52 ரன்களுக்கும், முகமது ஹாரிஸ் 3 ரன்களுக்கும், முகம்மது நவாஸ் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த முகமது ரிஸ்வான் - இஃப்திகார் அஹ்மத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுப்பககம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஃப்திகார் அஹ்மத் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷதாப் கானும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த முகமது ரிஸ்வான் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 86 ரன்களை குவித்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளையும், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News