பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணகாம தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் அறிமுக வீரர் முகமது ஹுரைரா 6 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 11 ரன்னிலு விக்கெட்டை இழக்க,  அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்க்ள் பாபர் ஆசாம் 8 ரன்களுக்கும், காம்ரன் குலாம் 5 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து 6 விக்கெட்டுகளை கைவசம் இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 

Advertisement

அதன்படி சௌத் சகீல் 56 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 51 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌத் சகீல் 6 பவுண்டரிகளுடன் 86 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சல்மான் அலி ஆகா 2 ரன்னிலும், நௌமன் அலி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மறுபக்கம் முகமது ரிஸ்வான் 71 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து களைறங்கிய சஜித் கான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களையும், குர்ராம் ஷஷாத் 7 ரன்களிலும் என நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜொமல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுகளையும், கெவின் சின்க்ளேர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News