பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 7 ரன்னிலும், ஃபகர் ஸமான் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஹைதர் அலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஸ்வான் 38 ரன்னிலும், ஹைதர் அலி 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய முகமது நவாஸ், ஆசிஃப் அலி ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பாகிஸ்தான் அணி ரன்களைச் சேர்க்க தடுமாறியது. இறுதியில் இஃப்திகார் அஹ்மத், சதாப் கான் சற்று அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172ரன்களை சேர்த்தது.