PAK vs WI, 3rd T20I: பூரன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 208 இலக்கு!

Updated: Thu, Dec 16 2021 20:32 IST
Image Source: Google

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங்- ப்ரூக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. 

பின் பிராண்டன் கிங் 43 ரன்களில் ஆட்டமிழக்க, ப்ரூக்ஸ் 49 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - டேரன் பிராவோ இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் பூரன் அரைசதம் கடந்தார். பின் 64 ரன்கள் சோர்த்த கையோடும் அவரும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 64 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை