Pakistan vs West Indies 2nd Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்தானில் நடந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 127 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

Advertisement

இதனையடுத்து பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தன் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Advertisement

PAK vs WI 2nd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ் 
  • இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
  • நேரம் - ஜனவரி 25, காலை 10 மணி

PAK vs WI 2nd Test Pitch Report

இப்போட்டி முல்தானில் உள்ள புகழ்பெற்ற முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு இதுவரை 09 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 3 முறையும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி 350 ரன்களாக உள்ள நிலையில், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 206 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்சமாக ரன்களாக 823 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

PAK vs WI 2nd Test: Where to Watch?

Advertisement

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனங்களும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. ஒருவேளை ரசிகர்கள் இத்தொடரை பார்க்க விரும்பினால் ஃபேன் கோட் செயலியில் இப்போட்டியை நேரலையில் கண்டுகளிக்கலாம்.

PAK vs WI 2nd Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 55
  • பாகிஸ்தான் - 22
  • வெஸ்ட் இண்டீஸ் - 18
  • முடிவில்லை - 15

PAK vs WI 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஹாரி புரூக், திலக் வர்மா
  • ஆல்ரவுண்டர் - ஹார்டிக் பாண்ட்யா (துணைக் கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள் - முகமது ஷமி, ஜோஃப்ரா ஆர்ச்சர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
Advertisement

Pakistan vs West Indies 2nd Test Probable Playing XI

பாகிஸ்தான்: ஷான் மசூத் (கே), முஹம்மது ஹுரைரா, கம்ரான் குலாம், பாபர் ஆசம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, நோமன் அலி, சஜித் கான், குர்ரம் ஷாஜாத், அப்ரார் அகமது

வெஸ்ட் இண்டீஸ்: மைக்கேல் லூயிஸ், கிரேக் பிராத்வைட் (கே), கேசி கார்டி, கவேம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், அலிக் அதானாஸ், டெவின் இம்லாச், குடகேஷ் மோட்டி, கெவின் சின்க்ளேர், ஜோமெல் வாரிக்கன், ஜேடன் சீல்ஸ்

Advertisement

PAK vs WI 2nd test Dream11 Prediction, PAK vs WI Dream11 Prediction, Today Match PAK vs WI, PAK vs WI Series, PAK vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, PAK vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Pakistan vs West Indies

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News