மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!

Updated: Wed, May 21 2025 20:25 IST
Image Source: Google

வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும் இத்தொடருக்கான வங்கதேச அணி முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தன் டி20 அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், அணியின் துணைக்கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த சைம் அயூப் மற்றும் ஃபகர் ஸ்மான் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு ஹாரிஸ் ராவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீம் அஃப்ரிடி ஆகியோர் டி20 அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அவர்களின் செயல்பாடும் மோசமாக இருந்ததன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி மே 28ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூன் 1ஆம் தேதி முடிவடையும் என்றும், இத்தொடரின் அனைத்து போட்டிகளும் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் - வங்கதேச டி20 தொடர் அட்டவணை

  • முதல் டி20: மே 28 - கடாஃபி மைதானம்
  • இரண்டாவது டி20: மே 30 - கடாஃபி மைதானம்
  • மூன்றாவது டி20: ஜூன் 1 - கடாஃபி மைதானம்

பாகிஸ்தான் டி20 அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), ஷதாப் கான் (துணைக்கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஸமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது வாசிம் ஜூனியர், முஹம்மது இர்பான் கான், நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப்

Also Read: LIVE Cricket Score

வங்கதேச டி20 அணி: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தாவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், மஹேதி ஹசன் (துணை கேப்டன்), தன்வீர் இஸ்லாம், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தன்சிம் ஹசன் சாகிப், நஹித் ராணா மற்றும் ஷோரிபுல் இஸ்லாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை