ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது  ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி - குல் ஃபெரோசா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குல் ஃபெரோசா 2 ரன்களிலும், முனீபா அலி 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சித்ரா அமீன் 12 ரன்களுக்கும், ஒமைமா சோஹைல் 18 ரன்களுக்கும், துபா ஹசன் 5 ரன்களுக்கும் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணி 57 ரன்களில் 4 விக்கெட்டுகாளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த நிதா தார் மற்றும் ஃபாத்திமா சனா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதா தார் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஃபாத்திமா சனா 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபோதானி, சுகந்திகா குமாரி மற்றும் கேப்டன் சமாரி அத்தப்பத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு விஷ்மி குணரத்னே - சமாரி அத்தபத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சமாரி அத்தபத்து 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரமா 7 ரன்களுக்கும், ஹாசினி பெரேரா ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் இலங்கை அணி 52 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் நிலாக்‌ஷி டி சில்வா 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சதியா இக்பால் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஃபாத்திமா சனா, ஒமைமா சொஹைல் மற்றும் நஷ்ரா சந்து ஆகியோர் தலா 2விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News