டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் சுனில் கவாஸ்கரை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

Updated: Sun, Jun 02 2024 06:28 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.

அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டுள்ள பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்தாண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொண்டுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியானது நேற்றைய தினம் அமெரிக்கா சென்றடைந்தது. அப்போது அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். பாபர் ஆசாம் மற்றும் சுனில் காவஸ்கர் இருவரும் சந்தித்த காணொளியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளது. தற்சமயம் அக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியானது தங்களது முதல் லீக் ஆட்டத்தை ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 09ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கேப்டன்), சயீம் அயூப், முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், அசாம் கான், உஸ்மான் கான், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான், முகமது அமீர், அப்பாஸ் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை