ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தொடர் அங்கு நடந்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என இந்தியா அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுங்கள் என இந்தியா போர் கொடி தூக்கியது.

Advertisement

இதற்கு பதிலடி தந்த பாகிஸ்தான் இந்தியா ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு வரமாட்டோம் என மிரட்டியது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி தீர்வு காண கடந்த பிப்ரவரி நான்காம் தேதி பஹைரனில் அனைத்து நாடுகளும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. எனினும் இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. 

Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததால் இந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனை அடுத்து அடுத்த மாதம் மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த உறுப்பினர் நாடுகள் முடிவெடுத்தனர். இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் எவ்வித பிரச்சனையும் இன்றி தொடரை நடத்த தற்போது ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து மாற்றுவதற்கான பேச்சுக்கே இடம் இல்லை. எனினும் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த நாங்கள் முன்வந்துள்ளோம். மேலும் ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றாலும் அதனை துபாயில் நடத்த நாங்கள் சம்மதிக்கிறோம். இந்த யோசனையை இந்தியா ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஆசிய கோப்பை போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதன்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பாகிஸ்தான் அடித்துள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு வருவது தான் பிரச்சனை என்பதால் இந்திய போட்டிகளில் முழுமையாக வெளிநாட்டில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கு இந்தியா ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் அழுத்தத்தால் பாகிஸ்தான் இறங்கி வந்திருப்பதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News