பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது.

Advertisement

இந்த தொடரில் வெற்றி பெற்றதால் டி20 உலகக்கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதில் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அந்த அணியின் அதிரடி வீரரான ஆசிஃப் அலி காலில் ஏற்பட்டுள்ளதால் பெரும் பின்னடைவு உருவாகியுள்ளது. நியூசிலாந்துடனான இறுதிப்போட்டியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

நியூசிலாந்து இன்னிங்ஸில், முகமது வாசிம் வீசிய பந்தை கான்வே பவுண்டரிக்கு அடிக்க, அதனை தடுக்க முயன்ற போது, ஆசிப் அலி டைவ் அடித்து கீழே விழுந்தார். வேகமாக சென்றதால் கால் மூட்டு பகுதி தரையில் வேகமாக உராசியது. இதனால் காயம் ஏற்பட்டு வலியால் துடித்த அவரை உடனடியாக மருத்துவக்குழு அழைத்து சென்றனர். இதன்பின்னர் போட்டி முழுவதும் அவர் வரவே இல்லை.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் பணிக்கு இருப்பது போன்று பாகிஸ்தான் அணிக்கு ஆசிஃப் அலி இருக்கிறார். கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தும் திறமைக்கொண்டவர். பாகிஸ்தான் அணியில் தற்போது ஓப்பனிங் வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மட்டுமே நம்பிக்கை தரும் நிலையில் ஆசிஃப் அலியும் காயமடைந்திருப்பதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள அதிரடி வீரர் ஃபகர் ஸாமன் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

முன்னதாக உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த உஸ்மான் காதிர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது காயம் இன்னும் சரியாகத காரணத்தினால் அவருக்கு பதிலாக ஃபகர் ஸமான் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம் உஸ்மான் காதில் கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Advertisement

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கேட்ச்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபக்கர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத்.

காத்திருப்பு வீரர்கள்: உஸ்மான் காதர், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News