PAK vs ENG: முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Updated: Tue, Sep 24 2024 22:36 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியானது சமீபத்தில் வங்கதேச அணியும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி, வரலாற்றில் முதல் முறையாக வங்கதேச அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. 

இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் 37 வயதான சுழற்பந்துவீச்சாளர் நோமன் அலிக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தி ஈர்த்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் அணிக்காக நோமன் அலி கடைசியாக கடந்தாண்டு நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரில் தான் விளையாடினார்.

மேலும் அப்போட்டியில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தி இருந்தார். ஆனால் அதன்பின் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த குர்ராம் ஷஷாத் இதுவரை காயத்தில் இருந்து மீளாத நிலையில், அந்த வாய்ப்பானது நோமன் அலிக்கு வழங்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

அதேசமயம் இந்த டெஸ்ட் போட்டிககான பாகிஸ்தான் அணியில் இருந்து காம்ரன் குலாம் மற்றும் முகமது அலி ஆகியோர் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். மேற்கொண்டு வங்கதேச டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அமர் ஜாமல் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, சர்ஃப்ராஸ் அஹ்மத் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களை உறுதிசெய்துள்ளனர். 

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், மிர் ஹம்சா, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃப்ராஸ் அகமது, ஷஹீன் ஷா அஃப்ரிடி.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ரெஹான் அஹ்மத், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் காக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜேக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை