ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நாளை முதல் அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளதால், இம்முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

அந்த வகையில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணி -பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா 
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

அதிலும் கேப்டன் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி ஆகியோர் பேட்டிங்கில் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

அவர்களுடன் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவூஃப், ஹசன் அலி ஆகியோர் பந்துவீச்சில் மிரட்டி வருவதால் நிச்சயம் எதிரணிக்கு அவர்களை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும்.

அதேசமயம் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு சீசனில் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. 

அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஃபிஞ்ச், மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட் ஆகியோர் அஸ்திவாரமாக விளங்குகின்றன. 

Advertisement

பந்துவீச்சில் ஹசில்வுட், ஸ்டார்க், ஸாம்பா என டி20 ஸ்பெஷலிஸ்டுகள் இருப்பது அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • பாகிஸ்தான் வெற்றி - 13
  • ஆஸ்திரேலியா வெற்றி - 9
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

Advertisement

பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் (கே), ஃபகார் ஸமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அஃப்ரிடி

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கே), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: T20 World Cup 2021

Advertisement

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ் - ஆசிஃப் அலி, பாபர் அசாம், சோயப் மாலிக், டேவிட் வார்னர்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ்
  • பந்து வீச்சாளர்கள் - ஷஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News