ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிரடியான தொடக்கத்தைக் கொடித்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துகொடுத்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனை குல் ஃபெரோசா 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா அலியும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சித்ரா அமீன் 28 ரன்களுக்கும், நிதா தர் 29 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

அதன்பின் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஃபாத்திமா சனா 37 ரன்களையும், அலியா ரியாஸ் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - டஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டஸ்மின் பிரிட்ஸ் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து லாரா வோல்வார்ட்டும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நதின் டி கிளார் 12 ரன்களுக்கும், அன்னெக் போஷ் 24 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சுனே லூஸ் - சோலே ட்ரையன் இணை அபாரமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வதில் கவனம் செலுத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனே லூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுனே லூஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்களையும், சோலே ட்ரையான் 30 ரன்களையும் சேர்த்தனர். 

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியால் 4 விக்கெ இழப்பிற்கு 168 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் சதியா இக்பால், நஷ்ரா சந்து அகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News