பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அனம் அமின், டுபா ஹசன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணியில் குல் ஃபெரொசா ரன் ஏதுமின்றியும், முனிப் அலி, இர்ரம் ஜாவத் தலா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் பிஸ்மா மரூஃப் அதிரடியாக விளையாடி 28 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய நிதா தார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் 18.4 ஓவர்களில் பாகிஸ்தான் மகளிர் அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News