Pat Cummins Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதான் மூலம் ரிச்சி பெனாட்டின் 62 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்180 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 190 ரன்களில் ஆல் அவுட்டானது. இருப்பினும் அந்த அணி 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து 10 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 18 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ரிச்சி பெனாட்டின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்து அசத்தியுள்ளார். 

முன்னதாக கடந்த 1958 முதல் 1963ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிச்சி பெனாட் 28 போட்டிகளில் 138 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் தற்சமயம் பாட் கம்மின்ஸ் 35 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தியதுடன் அதில் 139 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய் சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய கேப்டன்

  • 139* – பேட் கம்மின்ஸ் (63 இன்னிங்ஸ்)
  • 138 – ரிச்சி பெனாட் (56 இன்னிங்ஸ்)
  • 41 – பாப் சிம்ப்சன் (55 இன்னிங்ஸ்)
  • 39 – இயன் ஜான்சன் (27 இன்னிங்ஸ்)
  • 31 – மான்டி நோபல் (24 இன்னிங்ஸ்) 
Advertisement

Also Read: LIVE Cricket Score

இது தவிர்து சர்வதேச, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பாட் கம்மின்ஸ் (35 போட்டிகளில் 139 விக்கெட்டுகள்*) பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைப் பட்டியலில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 48 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தியதுடன் 187 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News