பதிரானா இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார் - எம் எஸ் தோனி புகழாரம்!

Updated: Sat, May 06 2023 20:42 IST
Pathirana would be a great asset for Sri Lanka - MS Dhoni! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணி நேஹல் வதேராவின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரானா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

வெற்றிக்குப் பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “ஒரு எளிமையான காரணத்தால் இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக இருந்தது. பாயிண்ட்ஸ் டேபிள் நடுவில் குழப்பங்கள் இருக்கிறது. கடந்த சில ஆட்டங்களின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. எனவே நாங்கள் வெற்றிக்கு பக்கத்தில் இருப்பது நல்லது.

டாசில் முடிவு எடுப்பதில் எனக்கு குழப்பம் இருந்தது. நான் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்தேன். ஆனால் அணியின் சிந்தனைக்குழு முதலில் பந்து வீச வேண்டுமென்றது. காரணம் அவர்கள் மழையைப் பற்றி நினைத்தார்கள். நான் ஆடுகளம் இரண்டாவது பகுதியில் மிகவும் மெதுவாக மாறும் என்று நினைத்தேன்.

ஆனால் இறுதியில் பெரும்பான்மையானவர்கள் முதலில் பந்து வீச வேண்டும் என்று முடிவு எடுத்ததால், அதன்படியே நான் சென்றேன். ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் பிறகு உட்கார்ந்து பேசிக் கொள்ளலாம். நான் ஆரம்பத்தில் மழை வந்தாலும் ஆட்டத்தின் பெரும்பகுதி முடிந்திருக்கும் என்றும், மழை ஆட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் உறுதியாக நம்பினேன். ஆனால் கடைசியில் பெரும்பான்மை முடிவின் பக்கம்தான் செல்ல வேண்டியது இருந்தது.

பதிரானாவின் பந்தகளை சிறந்த ஆக்‌ஷன் இல்லாத பேட்டர்கள் விளையாடுவது கடினம். இது அவரது வேகம் அல்லது மாறுபாடுகளால் அல்ல, அவரது நிலையான யார்க்கர்களை எதிர்கொள்வது கடினம். அவர் சிவப்பு-பந்து கிரிக்கெட் விளையாடுவதையும், அனைத்து ஐசிசி போட்டிகளிலும் விளையாடுவதையும் நான் விரும்புகிறேன், அவர் இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார்” என்று பாராட்டியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை