வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!

Updated: Wed, May 14 2025 19:55 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி இம்மாதம் இறுதியில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரி;ல் விளையாடவுள்ளது. அதன்படி அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மே 21ஆம் தேதியும் டி20 தொட்ர் ஜூன் 12ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. 

இதையடுத்து இத்தொடருக்கான் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஷாய் ஹோப் தலைமையிலான இந்த ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர்கள் பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுடன் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பாட்ட இளம் வீரர் ஆண்ட்ரூ ஜெவெலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான அயர்லாந்து அணியின் கேப்டனாக பால் ஸ்டிர்லிங் தொடர்கிறார். மேற்கொண்டு அயர்லாந்து ஒருநாள் அணியில் டார் ஆர்டர் பேட்டர் கேட் கார்மைக்கேல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டாம் மேயர்ஸ் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து டி20 அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் லியாம் மெக்கர்த்தி இடம்பிடித்துள்ளார். அதேசமயம் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மார்க் அதிர் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு பேரி மெக்கர்த்தி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கிரேய்க் யங், கர்டிஸ் காம்பெர், ஜோஷுவா லிட்டில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.

அயர்லாந்து ஒருநாள் அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் காம்பெர், கேட் கார்மைக்கேல், ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷ் லிட்டில், டாம் மேயர்ஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, லியாம் மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங்

அயர்லாந்து டி20 அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அதிர், ரோஸ் அதிர், கர்டிஸ் காம்பெர், கரெத் டெலானி, ஜார்ஜ் டக்ரெல், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, லியாம் மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட், கிரேக் யங்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

Also Read: LIVE Cricket Score

வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து

  • முதல் ஒருநாள் போட்டி: மே 21, டப்ளின்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: மே 23, டப்ளின்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: மே 25, டப்ளின்
  • முதல் டி20: ஜூன் 12, பிரேடி
  • இரண்டாவது டி20: ஜூன் 14, பிரேடி
  • மூன்றாவது டி20: ஜூன் 15, பிரேடி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை