சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச போட்டிகளுக்கு ஒரே மாதிரியான ஊதியம் பெறுவார்கள் என்று அறிவித்து இருந்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் பாலின பாகுபாட்டை தவிர்க்கும் விதமாக ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Advertisement

ஆண், பெண் இரு பாலருக்கும் சம ஊதியம் அறிவித்த நாடுகளான நியூசிலாந்து மற்றும் இந்தியாவுடன் தற்போது தென் ஆப்பிரிக்காவும் இணைந்துள்ளது. ஐசிசி போட்டிகளில் ஆடவர் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியை எட்டியது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியது. இதனால் தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போலெட்சி மொசெகி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News