ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விலகல்; அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த பஞ்சாப்!

Updated: Sat, Sep 11 2021 21:11 IST
PBKS announce Aiden Markram as left-hander's replacement (Image Source: Google)

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள்  வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகின்றன. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

சில வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடாதது சில அணிகளுக்கு பாதிப்பாக அமையும். அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினர்.

எனவே அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸையும், இங்கிலாந்தின் ஆதில் ரஷீத்தையும் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளர்.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரமை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இவர் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை