ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Mar 20 2024 15:07 IST
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையடுத்து மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு ஐபிஎல் அணிகளும் இத்தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் நிலையில் நடப்பு சீசனில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் விளையாடவுள்ளனர். மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், மொஹாலி
  • நேரம் - மதியம் 3.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானமானது கடந்த 2021ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.  இதில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடபெறவுள்ளன. இதனால் இந்த மைதானத்தின் ஆடுகளம் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் இங்கு நடைபெற்றுள்ள சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதேசமயம் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமலும் தடுமாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • பஞ்சாப் கிங்ஸ் - 16
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 16

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ் : ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், லியான் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் சர்மா, சாம் கரண், ஹர்ஷல் படேல், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லலித் யாதவ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜிதேஷ் சர்மா, ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர் (துணை கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா
  • ஆல்ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ் (கேப்டன்), அக்ஸர் படேல், சாம் கரண்
  • பந்துவீச்சாளர்கள் - குல்தீப் யாதவ், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

PBKS vs DC IPL 2024 Dream11 Prediction, Today Match PBKS vs DC, PBKS vs DC Dream11 Team, Fantasy Cricket Tips, PBKS vs DC Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Punjab Kings vs Delhi Capitals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை