ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Apr 20 2024 19:39 IST
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டிவருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஷும்பன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் குஜராத் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானமானது கடந்த 2021ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.  இதில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடபெறவுள்ளன. இதனால் இந்த மைதானத்தின் ஆடுகளம் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் இத்தொடரில் அங்கு நடைபெற்ற போட்டிகள் அனைத்து அதிக ஸ்கோர்களை குவித்த போட்டிகளாக அமைந்துள்ளன. அதேசமயம் இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச சிறப்பாக இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • பஞ்சாப் கிங்ஸ் - 02
  • குஜராத் டைட்டன்ஸ் - 02

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ்: சாம் கரண் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ரைலீ ரூஸோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்..

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், ஷஷாங்க் சிங், ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அசுதோஷ் சர்மா, சாய் சுதர்ஷன்
  • ஆல்ரவுண்டர் - சாம் கரன் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ரஷித் கான், ஸ்பென்சர் ஜான்சன்.

PBKS vs GT IPL 2024 Dream11 Prediction, Today Match Prediction, Today Match PBKS vs GT, PBKS vs GT Dream11 Team, Fantasy Cricket Tips, PBKS vs GT Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Punjab Kings vs Gujarat Titans

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை