Punjab Kings vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் 54ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

PBKS vs LSG Match Details

  • மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் -  இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தர்மசாலா
  • நேரம் - மே 04, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 54ஆவது போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 11 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 6 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணியும், 4 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 137 ரன்களாக உள்ள நிலையில், இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 200 ரன்கள் உள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

PBKS vs LSG: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PBKS vs LSG Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 05
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- 03
  • பஞ்சாப் கிங்ஸ் - 02

PBKS vs LSG Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- பிரப்சிம்ரன் சிங், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஐடன் மார்க்ரம், பிரியான்ஷ் ஆர்யா, ஆயுஷ் படோனி
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கோ ஜான்சன், மிட்செல் மார்ஷ்
  • பந்துவீச்சாளர்கள்- அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் (துணை கேப்டன்), அவேஷ் கான்.
Advertisement

PBKS vs LSG Predicted Playing 11

Punjab Kings XI: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்கிலிஸ், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், அசம்துல்லா ஓமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்.

இம்பேக்ட் வீரர் - யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

Lucknow Super Giants - மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி.

இம்பேக்ட் வீரர் - மயங்க் யாதவ்.

PBKS vs LSG Dream11 Prediction, PBKS vs LSG, PBKS vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, PBKS vs LSG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Punjab Kings vs Lucknow Super Giants

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News