பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

Updated: Mon, May 26 2025 12:14 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன. இருப்பினும் இதில் எந்த இரு அணிகளில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் என்பது இதுவரை உறுதியாகவில்லை.

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி முதலிரண்டு இடங்களுக்குள் நுழையும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் அந்த அணி கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால் இதில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றை எதிர்கொள்ள முனைப்புடன் விளையாடவுள்ளது.

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மிடில் ஆர்டர் பேட்டர்களும் அபாரமாக விளையாடி வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் சரிவர செயல்படாதது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்து தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியிலும் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் கவனத்துடன் அந்த அணி விளையாடவுள்ளது. 

அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், ஹர்திக் பண்டியா, தீலக் வர்மா, நமன் தீர் என நட்சத்திர பட்டாளங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். மறுபக்கம் பந்துவீச்சிலும் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோரும் அபாரமான ஃபார்மில் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று, தங்களின் ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • மும்பை இந்தியன்ஸ் - 17
  • பஞ்சாப் கிங்ஸ் - 15

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன், பிரப்சிம்சன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்ட்யா, மார்கோ ஜான்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் சாண்ட்னர்
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, ஹர்பிரீத் ப்ரார்.
     
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை