ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, May 08 2024 14:19 IST
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

Punjab Kings vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, IPL 2024: இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 4 வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

PBKS vs RCB : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தரம்சாலா
  • நேரம் - இரவு 7.30 மணி

PBKS vs RCB, Pitch Report

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டி இதுவாகும். மேலும் இங்குள்ள பிட்ச்கள் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருபிரிவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இங்கு கூடுதல் பவுன்ஸ் இருக்கும் என்பதால் பேட்டர்கள் தங்கள் ஷாட்டுகளை விளையாட வசதியாக அமையும். இந்த மைதானம் பேட்டர்களுக்கு ஏற்றதாக பார்க்கப்பட்டலும், பந்துவீச்சாளர்களாலும் இங்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பாக கடந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

PBKS vs RCB: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 32
  • பஞ்சாப் கிங்ஸ் - 17
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 15

PBKS vs RCB: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Punjab Kings vs Royal Challengers Bengaluru: Probable Playing XI

Punjab Kings Probable Playing XI: ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ரைலி ரூஸோவ், ஷஷாங்க் சிங், சாம் கரன் (கே), ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

Royal Challengers Bengaluru Probable Playing XI: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கே), ராஜத் பட்டிதார், வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், கர்ண் சர்மா, ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

PBKS vs RCB: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்டர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ் (துணை கேப்டன்), ஷஷாங்க் சிங்
  • ஆல்-ரவுண்டர்: கிளென் மேக்ஸ்வெல், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள்: ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, முகமது சிராஜ்

PBKS vs RCB Dream11 Prediction, Today Match Prediction, Today Match PBKS vs RCB, PBKS vs RCB Dream11 Team, PBKS vs RCB Head-to-Head record, Fantasy Cricket Tips, PBKS vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Punjab Kings vs Royal Challengers Bengaluru

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை