Royal Challengers Bengaluru vs Punjab Kings Dream11 Prediction, IPL 2025 Final: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுநாள் வரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

RCB vs PBKS Match Details

  • மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - ஜூன் 3, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Narendra Modi Stadium, Ahmedabad Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 64ஆவது போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 4 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 160 ரன்களாக உள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரிலும் இங்கு நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பெற்றுளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

RCB vs PBKS: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RCB vs PBKS Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 36
  • பஞ்சாப் கிங்ஸ்- 18
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 18

RCB vs PBKS Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - பில் சால்ட், ஜோஷ் இங்கிலிஸ், ஜிதேஷ் சர்மா, பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), பிரியன்ஸ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), மயங்க் அகர்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட்.
Advertisement

RCB vs PBKS Predicted Playing 11

Punjab Kings XI : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன், வைஷாக் விஜய் குமார்.

இம்பாக்ட் பிளேயர் - யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

Royal Challengers Bengaluru XI :பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.

இம்பாக்ட் பிளேயர் - சுயாஷ் சர்மா.

RCB vs PBKS Dream11 Prediction, RCB vs PBKS, RCB vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RCB vs PBKS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Royal Challengers Bengaluru vs Punjab Kings

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News