ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில்  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியதுடன், முதல் குவாலிஃபையர் சுற்றில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இதில் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மிடில் ஆர்டர் பேட்டர்களும் அபாரமாக விளையாடி வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் சரிவர செயல்படாதது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 2ஆம் இடத்தை பிடித்து முதல் குவாலிஃபையர் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படும் நிலையில் மற்ற வீரர்களும் சோபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மறுபக்கம் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்ம ஆகியோருடன் ஜோஷ் ஜேசில்வுட், பிளசிங் முஸரபானி ஆகியோரும் அணியில் இணைந்துள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பைக்கு அருகில் செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், நுவான் துஷாரா, யாஷ் தயாள்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 35
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 17
  • பஞ்சாப் கிங்ஸ் - 18

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட், பிரப்ஷிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், பிரியான்ஷ் ஆர்யா
  • ஆல்ரவுண்டர் - மார்கோ ஜான்சன், ரொமாரியோ ஷெஃபர்ட்
  • பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், அர்ஷ்தீப் சிங்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News