ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி கணிக்க முடியாத அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏனெனில் முதல் போட்டியில் வெற்றிபெற்ற அந்த அணி, அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விழிம்பில் இருந்த அந்த அணி இறுதிநேரத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து கம்பேக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் கடைசிவரை போராடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அணியின் பேட்டிங்க் வரிசையில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங் ஆகியோருடன் தற்போது ஷஷாங்க் சிங்கும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் சாம் கரண், சிக்கந்தர் ரஸா, ஜிதேஷ் சர்மா போன்ற நடத்திர வீரர்கள் தொடர்ந்து சோபிக்க தவறுவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சில் காகிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் அந்த நடப்பு ஐபிஎல் சீசனில் வலிமை மிக்க அணிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரை எடுத்துக்கொண்டால் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் ஷமாத் ஆகியோருடன் தற்போது இளம் வீரர் நிதிஷ் ரெட்டியும் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களில் சில வீரர்கள் சோபிக்க தவறினாலும், அடுத்து வரும் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். 

Advertisement

அணியின் பந்துவீச்சு துறையை புவனேஷ்வர் குமார் வழிநடத்தி வருகிறார். அவருக்கு துணையாக நடராஜன், பாட் கம்மின்ஸ், ஷஃபாஸ் அஹ்மத், ஜெய்தேவ் உனாத்கட், மயங்க் மார்கண்டே போன்ற வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் நடராஜன் மற்றும் உனாத்கட் இருவரும் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றிவருவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியின் சுழற்பந்துவீச்சு சற்று ஏமாற்றமளிக்கும் வகையில் இருப்பதால் அது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானமானது கடந்த 2021ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.  இதில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடபெறவுள்ளன. இதனால் இந்த மைதானத்தின் ஆடுகளம் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் இங்கு நடைபெற்றுள்ள சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இருப்பினும் இரு அணிகளிலும் அதிரடியான பேட்டர்கள் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 21
  • பஞ்சாப் கிங்ஸ் - 07
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 14

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Advertisement

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கே), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கரன், சிக்கந்தர் ராசா, ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேட்ச்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், டிராவிஸ் ஹெட், ஷஷாங்க் சிங், அபிஷேக் சர்மா (துணை கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - ஐடன் மார்க்ரம், சாம் கரன்
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், காகிசோ ரபாடா, தங்கராசு நடராஜன்.

PBKS vs SRH IPL 2024 Dream11 Prediction, Today Match PBKS vs SRH, PBKS vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, PBKS vs SRH Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Punjab Kings vs Sunrisers Hyderabad

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News