எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!

Updated: Thu, Apr 11 2024 20:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது ஆர்சிபி வீரர் விராட் கோலியை, கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் கட்டியணைத்து சில வார்த்தைகளை கூறிச்சென்றார். இக்காணொளியானது இணையாத்தில் வைரலாகியது. 

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் கிரிக்கெட் களத்தில் மோதுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக கடந்த ஐபிஎல் சீசனின் போது லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் - விராட் கோலி இருவருக்கும் இடையிலான மோதலானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்த சீசனிலும் இவர்கள் களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு பிரச்சனையில் ஈடுபடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சிதறடிக்கும் வகையில் விராட் மற்றும் கம்பீர் இருவரும் பரஸ்பரம் அன்பு பாராட்டிக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விராட் கோலி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பெசிய அவர், “எனது செயலால் சிலர் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். நான் நவீனை கட்டி அணைத்தேன். கௌதம் கம்பீர்  என்னை கட்டி அணைத்தார்.

 

இந்த செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும்” என தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கோலி தெரிவித்தார். இதனையடுத்து விராட் கோலியின் இந்த விளக்கமானது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை