ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 டி20 , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

Advertisement

இதற்கான ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்தது. மேலும் அனுபவ வீரர்கள் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் தனிப்பட்ட காரணங்களால், இத்தொடரை புறக்கணித்துள்ளனர். 

Advertisement

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி டி20 தொடருக்கு முன்னதாக தங்களுக்குள்ளாகவே இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் ஒரு அணியும், ஹென்ரிக்ஸ் தலைமையில் மற்றொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 32 ரன்களையும் எடுத்தனர். எதிரணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹெண்ட்ரிக்ஸ் அணியில் ஜோஷ் பிலீப், கேப்டன் ஹென்ரிக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். இதன் மூலம் 2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் அசத்தினர். 

அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ் பிலீப் 67 ரன்களையும், ஹென்ரிக்ஸ் 51 ரன்களையும் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

ஆஸ்திரேலியா 1: ஆரோன் பிஞ்ச் (கே), மத்தேயு வேட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், மிட்செல் ஸ்வெப்சன், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், வெஸ் அகர், ஜோஷ் ஹேசில்வுட்.

ஆஸ்திரேலியா 2: ஜோஷ் பிலிப், ஆஷ்டன் அகர், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் (கே), பென் மெக்டெர்மொட், டான் கிறிஸ்டியன், ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ரிலே மெரிடித், தன்வீர் சங்கா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News