அயர்லாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெல்ஃபெஸ்ட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக தொடங்கினார். 12 பந்தில் 24 ரன்கள் அடித்த அவரை நீடிக்க விடாமல் மார்க் அடைர் வீழ்த்தினார். ஃபின் ஆலன் (1), க்ளீவர் (5) ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் ஜோஷுவா லிட்டில்.

Advertisement

அதன்பின்னர் கிளென் பிலிப்ஸும் ஜிம்மி நீஷமும் ஜோடி சேர்ந்த அதிரடியை வெளிப்படுத்தினார். இதில் 16 பந்தில் 29 ரன்கள் அடித்து நீஷம் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் பொறுப்புடன் நிலைத்து நின்று அடித்து ஆடிய கிளென் பிலிப்ஸ் அரைசதம் அடித்தார். 52 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 69 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று முடித்து கொடுத்தார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷுவா லிட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பால் ஸ்டர்லிங், பால்பிர்னி, ஹாரி டெக்டார் என அந்த அணியின் முக்கியமான வீரர்கள் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அதிகபட்சமாக காம்ஃபெர் 29 ரன்களும், மார்க் அதிர் 25 ரன்களும் மட்டுமே அடித்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய லாக்கி ஃபெர்குசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அயர்லாந்து வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் 18.2 ஓவரில் 142 ரன்களுக்கு அயர்லாந்து அணி ஆல் அவுட்டாக, 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News