பதிரானா பந்துவீச்சு வித்தியாசமாக இருப்பதால் அவரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Sun, May 07 2023 13:44 IST
Played 10-12 balls of Matheesha Pathirana and didn't want to face him, says Ruturaj Gaikwad! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணி நேஹல் வதேராவின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரானா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

இந்த நிலையில் பதிரானாவின் பந்துவீச்சு குறித்து சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில்,  “பதிரானாவுக்கு சென்னை அணியுடன் இது 2ஆவது சீசன். கடந்த சீசனிலேயே சென்னை அணிக்காக களமிறங்கினார். பதிரானா பந்துவீச்சு வித்தியாசமாக இருப்பதால் அவரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. 2 சீசன்களில் அவரை வலைபயிற்சியின் போது 10 முதல் 12 பந்துகளை தான் எதிர்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சென்னை அணியின் மற்றொரு தொடக்க வீரரான டேவன் கான்வே இதுவரை பதிரானாவை வலைபயிற்சியில் எதிர்கொண்டதே இல்லை என்று தெரிய வந்துள்ளது. நேற்றைய ஆட்டம் முடிந்த பின் மும்பை அணியின் இளம் வீரரான நேஹல் வதேராவும், பதிரானாவை எதிர்கொள்வது சிரமமாக இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பதிரானாவின் பந்துவீச்சு அவரது குருவான மலிங்காவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை