மகளிர் டி20 தரவரிசை: டாப் 10-இல் இடம்பிடித்த ஸ்மிருதி, ஷஃபாலி, ஜெமிமா!

Updated: Wed, Dec 21 2022 10:14 IST
Image Source: Google

சர்வதேச மகளிர் டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (733 ரேட்டிங் புள்ளி) 3ஆவது இடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தஹிலா (818 புள்ளிகள்) மற்றும் பெத் மூனி (733 புள்ளிகள்) உள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா 6ஆவது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10ஆவது இடத்திலும் உள்ளனர். மகளிர் பேட்டிங் தரவைசையில் முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா வீராங்கனைகளை தவிர மற்ற நாட்டு வீராங்கனைகள் இடம் பெறவில்லை.

அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் தீப்தி சர்மா (378 புள்ளிகள்) 3ஆவது இடம் பிடித்துள்ளார். முதல் இரு இடங்களில் நியூசிலாந்தின் ஷோபி டெவின் ( 389 புள்ளி), வெஸ்ட் இண்டீசின் ஹெய்லீ மேத்யூஸ் ( 385 புள்ளி ) ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மா (727 புள்ளிகள் )3ஆவது இடத்திலும், ரேணுகா சிங் ( 710 புள்லிகள் ) 5ஆவது இடத்திலும் உள்ளனர். முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஷோபி எக்ஸ்லஸ்டோன் (763 புள்ளி), சாரா க்ளென் (733 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை