டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பந்த் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் - ரிக்கி பாண்டிங்!

Updated: Tue, May 28 2024 20:29 IST
Image Source: Google

வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் விபத்து காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த ரிஷப் பந்த், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதன் காரணமாக நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் ரசித்துள்ளேன். இது குறிப்பிடத்தக்க கம்பேக். மேலும் அவர் உலகக்கோப்பையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன்.

முன்னதாக அவருக்கு விபத்து ஏற்பட்ட சில மாதங்களில் நான் அவரைச் சந்தித்து பேசினேன். அப்போது அவரது நிலைமையை பார்க்கும் போது அவரால் இனி கிரிக்கெட் விளையாடமுடியுமா என தோன்றியது. ஏனெனில் அவர் உடலளவிலும், மனதளவிலும் மோசமான நிலையை அனுபவித்தார். அப்போது அவரால் எழுந்துகூட நிறக் முடியாமல் இருந்தார். மேலும் அவர் ஊன்றுகோலின் உதவியுடன் நடக்க முயற்சித்து சமயம் அது. 

அதனால் நான் அவரிடன் அடுத்த சீசனில் என்ன செய்ய போகிறாய் என்று கேட்டது நினைவில் உள்ளது. அதற்கு பதிலளித்த ரிஷப் பந்த, நான் நிச்சயம் அடுத்த சீசனில் திரும்பி வருவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும் அவர் தனது கம்பேக்கிற்காக கடுமையாக உழைத்து மீண்டு வந்துள்ளார். தற்சமயம் உண்மையில் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனெனில் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும், அவரது பேட்டிங்கின்போது எவ்வளவு ஆற்றல் மிக்கவர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவருடைய விக்கெட் கீப்பிங்கைப் பொறுத்தவரையில், 14 போட்டிகளிலும் ஒவ்வொரு பந்துக்கும் தொடர்ச்சியாக உட்கார்ந்து எழுந்து விக்கெட் கீப்பிங் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பந்த் மூன்று அரைசதங்கள் உள்பட 446 ரன்களை குவித்துள்ளார். மேலும் நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் எனும் பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை