ரிஷப் பந்த் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்!

Updated: Fri, Jan 20 2023 21:53 IST
Image Source: Google

அண்மையில், கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எலும்பு முறிவுகள் ஏதும் இல்லாத போதிலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம் எனவே கூறப்படுகிறது. 

மேலும், இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாடுவது கடினம் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிஷப் பந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  

அதில் அவர் ரிஷப் பந்த் குறித்து கூறும்போது,”ரிஷப் பந்த் எனக்கு மிகவும் பிடித்த நபர். கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் அவருடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். 

கடந்த இரண்டு நாட்களாக அவருடன் நான் பேசும்போது, இந்த காலக் கட்டம் அனைவருக்கும் மிகவும் கடினமானது என்றேன். நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்வோம். அவர் ஐபிஎல் போட்டிகளின்போது எனது அருகில் இருந்தால் போதும். விரைவில் அவர் மைதானத்தில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை