ENG vs SL, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; லாரன்ஸ், பாட்ஸுக்கு வாய்ப்பு!
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இலங்கை அணியானது இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்திலும் விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து லையன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியானது தங்கள் பிளேயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் அணியின் துணைக்கேப்டனாகவும் ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் மேத்யூ மோட்ஸ் மற்றும் டேன் லாரன்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஜோ ரூட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருடன் சோயப் பஷீரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டேன் லாரன்ஸ் பென் டக்கெட், ஒல்லி போப் (கே) ஜோ ரூட், ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வூட், சோயிப் பஷீர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர்
- முதல் டெஸ்ட் - ஆகஸ்ட் 21 - 25 - மான்செஸ்டர்
- இரண்டாவது டெஸ்ட் - ஆகஸ்ட் 29 - செப்.02 - லண்டன்
- மூன்றாவது டெஸ்ட் - செப்.06 - 10 - லண்டன்