எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Jan 26 2024 13:54 IST
Image Source: Google

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து, கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பார்லில் உள்ள போலாண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - போலாண்ட் பார்க் மைதானம், பார்ல்
  • நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

போலண்ட் பார்க் மைதானம் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த மைதானத்தில் அதிகபடியான பவுன்ஸ் இருக்கும் காரணத்தால் பேட்டர்களுக்கு ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சிறப்பாக பந்துவீசும் வேகப்பந்துவீச்சாளர்களும் இம்மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை சொலுத்தலாம்.

நேரலை

இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • பார்ல் ராயல்ஸ் - 01
  • டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01

உத்தேச லெவன்

பார்ல் ராயல்ஸ் - ஜேசன் ராய், ஜோஷ் பட்லர் (கே), விஹான் லூப், டேன் விலாஸ், மிட்செல் வான் ப்யூரன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஃபேபியன் ஆலன், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி, ஓபேத் மெக்காய்.

டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - மேத்யூ பிரீட்ஸ்கி, டோனி டி ஸோர்ஸி, குயின்டன் டி காக், ஜேஜே ஸ்மட்ஸ், ஹென்ரிச் கிளாசென், மார்கஸ் ஸ்டொய்னிஸ், வியான் முல்டர், கேசவ் மகராஜ் (கே), ரீஸ் டாப்லி, நூர் அஹ்மது, நவீன்-உல்-ஹக்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், ஹென்ரிச் கிளாசென்(துணைக்கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ஜேசன் ராய்(கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்கே
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ஜேஜே ஸ்மட்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், விஹான் லுபே
  • பந்துவீச்சாளர்கள்: கேசவ் மகராஜ், ரீஸ் டாப்லி, லுங்கி இங்கிடி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை