எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Mon, Jan 27 2025 09:44 IST
Image Source: Google

Paarl Royals vs Durban Super Giants Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 24 புள்ளிகளைப் பெற்று ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளார். அதேசமயம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றி, ஐந்து தோல்வி, இரண்டு முடிவில்லை என 08 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தை பிடித்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இதற்கு முன் இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதனால் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

PR vs DSG, SA20 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் -  போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானம், பார்க்
  • நேரம் - ஜனவரி 27,  இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)

PR vs DSG Pitch Report

இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 130 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 173 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PR vs DSG: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 05
  • பார்ல் ராயல்ஸ்- 02
  • டர்பன் சூப்பர் ஜெயன்ஸ் - 03

PR vs DSG: Where to Watch?

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PR vs DSG: Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென்
  • வீரர்கள்: டேவிட் மில்லர், லுவான்ட்ரே பிரிட்டோரியஸ், மேத்யூ பிரீட்ஸ்கே
  • ஆல்-ரவுண்டர்கள்: ஜோ ரூட், தயான் கலீம்
  • பந்து வீச்சாளர்கள்: முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, கேசவ் மகாராஜ், நவீன்-உல்-ஹக்

Paarl Royals vs Pretoria Capitals Probable Playing XI

Paarl Royals Probable Playing XI: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஜோ ரூட், மிட்செல் வான் பியூரன், டேவிட் மில்லர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், தயான் கலிம், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, பிஜோர்ன் ஃபோர்டுயின், துனித் வெல்லாலகே, முஜீப் உர் ரஹ்மான், குவேனா மபாகா.

Durban Super Giants Probable Playing XI: மேத்யூ ப்ரீட்ஸ்கீ, பிராண்டன் கிங், கேன் வில்லியம்சன், குயின்டன் டி காக், வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ் (கேப்டன்), ஜூனியர் டாலா, நூர் அகமது, நவீன்-உல்-ஹக்

PR vs DSG Dream11 Prediction, PR vs DSG Dream11 Team, Today Match PR vs DSG, SA20 2025, Fantasy Cricket Tips, PR vs DSG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Paarl Royals vs Durban Super Giants

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:* இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை