எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலினேட்டர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பார்ல் ராயல்ஸ் vs ஃபாஃப் டூ பிளெசிஸ்
- இடம் - வண்டரர்ஸ் மைதானம், ஜொஹன்னஸ்பர்க்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்ப்ப்டி)
பிட்ச் ரிப்போர்ட்
இப்போட்டி நடைபெறும் ஜோஹ்ன்னஸ்பர்க் ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து இமாலய இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவும்.
நேரலை
இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
நேருக்கு நேர்
மோதிய போட்டிகள் - 03
பார்ல் ராயல்ஸ் - 03
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 00
உத்தேச லெவன்
பார்ல் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், விஹான் லுபே, மிட்செல் வான் ப்யூரன், டேவிட் மில்லர் (கே), டேன் விலாஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, நகாபா பீட்டர், தப்ரைஸ் ஷம்சி
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: லுயிஸ் டு ப்ளூய், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், வெய்ன் மேட்சன், மொயின் அலி, டொனோவன் ஃபெரீரா, டக் பிரேஸ்வெல், தயான் கலீம், லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், டொனோவன் ஃபெரீரா
- பேட்டர்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), ஜேசன் ராய், லுயிஸ் டு ப்ளூய்
- ஆல்-ரவுண்டர்கள்: டக் பிரேஸ்வெல், மொயின் அலி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, விஹான் லுபே(துணைக்கேபட்ன்)
- பந்துவீச்சாளர்கள்: லிசார்ட் வில்லியம்சன், லுங்கி இங்கிடி
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.