ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணியானது ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதில் துருவ் ஜுரெல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடியதுடன் அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய ஏ அணியானது 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியானது மார்கஸ் ஹாரிஸின் அரைசதத்தின் மூலம் 223 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியின் நட்சத்திர வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 62 ர்னகளில் ஆட்டமிழக்க, தனுஷ் கோட்டியான் 44 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் இந்தியா ஏ அணி இரண்டவது இன்னிங்சில் 229 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. எதிரணி தரப்பில் ரோக்கிசியோலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணியில் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் கேமரூன் பான்கிராஃப் ஆகியோர் அடுத்தடுத்து முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனியும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய ஏ அணி 48 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா தனது முதல் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News