சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் புகழின் உச்சியை எட்டிய வீரர்களில் ஒருவரும் பிரித்வி ஷா. தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்திய பிரித்வி ஷா, இந்திய அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்றும் புழகப்பட்டார். ஆனால் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா, 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியாத சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளார். 

Advertisement

அவரும் ஐபிஎல் தொடர், கவுண்டி கிரிக்கெட் தொடர், உள்ளூர் போட்டிகள் என தனக்கு கிடைக்கு வாய்ப்புகளில் அவ்வபோது சதங்களை விளாசி காவனத்தை ஈர்த்து வந்தாலும், அவரது உடற்தகுதி என்பது அவரின் வாய்ப்புக்கு முதல் தடையாக உள்ளது. இந்நிலையில் தற்சமயம் அவரது மோசமான உடற்தகுதியின் காரணமாக நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடி வரும் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

Advertisement

அந்தவகையில் இந்திய அணியின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள மும்பை அணியானது பரோடா அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாலும், மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. 

இதனையடுத்து அந்த அணி அடுத்ததாக திரிபுரா அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் தான் உடற்தகுதி காரணத்தால் இப்போட்டிக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதாலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய பிரித்வி ஷா அதில், 7,12,01 மற்றும் 39 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேற்கொண்டு பிரித்வி ஷாவின் உடலில் 35 சதவீதம் கொழுப்பு இருப்பதாகவும், மீண்டும் அணிக்கு வருவதற்கு முன் அவருக்கு கடுமையான பயிற்சி தேவை என்றும் மும்பை அணி நிர்வாகம் எம்சிஏவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் முழு உடற்தகுதியை எட்டும் பட்சத்திலேயே அவருக்கு ரஞ்சி அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்க ஆதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News