Prithvi shaw fitness
விராட் கோலியை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் - பிரித்வி ஷாவுக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை!
இந்திய அணியின் தொடக்க வீரராக அறியப்பட்டபிருத்வி ஷா தற்போது தனது கேரியரில் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறார். முதலில் மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டர். அதன்பின் நடந்து முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது, நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இந்திய அண்டர்19 அணியின் கேப்டனாக செயல்பட்டு, யு19 உலகக்கோப்பை வென்றதன் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமான பிரித்வி ஷா, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக சச்சினுடன் ஒப்பிட்டப்பட்டார். ஆனால் அதன்பின் மோசமான உடற்தகுதி, ஃபார்ம் இழப்பு என அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வந்த பிரித்வி ஷா தற்சமயம் உள்ளூர் போட்டிகளில் கூட ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறுவதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
Related Cricket News on Prithvi shaw fitness
-
மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா!
மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24