கவுண்டி கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் பிரித்வி ஷா - வைரல் காணொலி!

Updated: Wed, Aug 02 2023 21:44 IST
Image Source: Google

விராட் கோலிக்கு பிறகு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற எந்த இந்திய அணி கேப்டனும் அதன் பிறகு பெரிய ஆளாக வரவில்லை. இதற்கு மிகப்பெரிய உதாரணமாக உன்குந்த் சந்த் இருந்தார் அவர் தற்போது இந்தியாவில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அமெரிக்காவில் சென்று குடியேறிவிட்டார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் பிரித்வி ஷா பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு தகுந்தார் போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலே சதம் விளாசி அசத்தினார். எனினும் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து பிரித்வி ஷா ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனால் அவருடன் களமிறங்கிய கில் தற்போது ஸ்டார் வீரராக வலம் வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரிலும் பிரித்விஷா தன்னுடைய திறமையை நிரூபிக்காமல் தடுமாறி வருகிறார்.

இம்முறை பிரித்விஷா சிறப்பாக விளையாடுவார் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்த நிலையில் அவருடைய மோசமான ஆட்டம் காரணமாக பிளேயிங் லெவனில் தனது இடத்தையே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இழந்தார். இந்த நிலையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக பிரித்விஷா இங்கிலாந்து சென்றுள்ளார். 

இந்திய அணியில் சேர்க்கப்படாத இந்த சூழலில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி அனுபவத்தை பெரும் முயற்சியில் அவர் இறங்கினார். இதற்காக தற்போது அவர் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாட உள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற உள்ள நிலையில் இதற்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்றது.

 

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். பவுண்டரி, சிக்சர் என பறக்கவிட்ட பிரித்வி ஷா 39 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பிரித்விஷா மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. சச்சின், சேவாக், டிராவிட், புஜாரா போன்ற வீரர்கள் எல்லாம் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி தங்களுடைய ஃபார்மை மீட்ட நிலையில் அதே பாதையில் பிரித்வி ஷாவும் கவுண்டியில் அதிரடி காட்டி ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை